Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் பிரேம்ஜி, ஷிவ் நாடார்!

 
ஐடி துறையில் உலகளவில் டாப் 100 பணக்காரர்களாக இருக்கும் மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் முதல் 20 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த அஸிம் பிரேம்ஜி மற்றும் ஷிவ் நாடார் இடம்பிடித்துள்ளனர். 


அஸிம் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத்தின் தலைவர். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 1,740 கோடி டாலர்கள். ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்று இவரை போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. 


ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார். இவருடைய சொத்து மதிப்பு 1,440 கோடி டாலராக உள்ளது. 


போர்ப்ஸ் வெளியிட்ட அந்தப் பட்டியலில் அமெரிக்கர்கள் மட்டும் 51 பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் (7,960 கோடி டாலர்) முதலிடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் நான்காம் இடத்திலும் உள்ளனர். மேலும், 100 பேர் பட்டியலில் இந்திய வம்சாவளிகளான ரமேஷ் வாத்வானி (73) மற்றும் பாரத் தேசாய் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் உள்ள 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 84,290 கோடி டாலர்கள். இதில் 7 பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close