Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் வால்மார்ட்!

வால்மார்ட், இந்த வார்த்தையைக் கேட்டாலே இந்தியாவில் உள்ள சில்லரை வியாபாரிகள், சிறு முதலீட்டாளர்கள் பயந்து நடுங்கினர். உலகின் மிகப் பெரிய மொத்த சில்லரை வியாபார நிறுவனமான வால்மார்ட், மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியாவில் விரிவாக்கத்தைத் தொடங்கியுள்ளது.
 
வால்மார்ட் நிறுவனம், 2007-ல் சுனில் மிட்டல் தலைமை வகித்த பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து இந்தியா முழுவதும் சில்லரை வர்த்தகத்தை மொத்த வியாபாரமாக செய்யத் திட்டமிட்டது. ஆனால், வால்மார்ட்டுக்கும் பார்திக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டு உடைந்தது. வால்மார்ட் தனியாகவே தனது தொழிலை நிறுவத் தொடங்கியது.

ஆனால், வால்மார்ட் வருகையினால் சிறு, குறு முதலீட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் அமெரிக்காவில் எழுந்த ஊழல் எதிர்ப்பு சட்டம் மற்றும் அயல்நாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் ஆகியவற்றினால், இந்தியா, சீனா, மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளில் வால்மார்ட் தனது தொழில் விரிவாக்கத்தை நிறுத்தி வைத்தது

கடைசியாக 2012 நவம்பரில் போபாலில் தனது கிளையை நிறுவியபிறகு, விரவாக்கப் பணிகளை நிறுத்தியே வைத்தது. இப்போது மூன்று ஆண்டுகள் கழித்து, ஆக்ராவில் தனது 21-வது கிளையைத் தொடங்கியுள்ளது.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் மேலும் 50 கிளைகள் தொடங்கப்படும் என்று வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான க்ரிஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
 
மீண்டும் விரிவாக்க நடவடிக்கையில் வால்மார்ட் இறங்கி இருப்பது இந்தியா முழுக்க உள்ள சில்லரை வியாபாரிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close