Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நேரத்தில் 250 விமானங்கள் வாங்கும் இண்டிகோ ..!

 

 
பயணிகள் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, ஒரே நேரத்தில் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து மொத்தமாக 250 விமானங்களை வாங்குவதற்கான 1.7 லட்சம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் செய்துள்ளது. 

இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது விமானச் சேவை மற்றும் குத்தகை விமானங்களை அதிகரிக்க ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து சுமார் 250 ஏ320நியோ சிங்கிள்-எய்செல் ஜெட் விமானங்களை வாங்கவுள்ளது. இதன் மொத்த மதிப்பு 1.73 லட்சம் கோடி ரூபாய். இதை கடந்த சனிக்கிழமை இண்டிகோ மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உறுதி செய்துள்ளன. 

தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் தன்னுடைய விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரையில் ஏர்பஸ் நிறுவனத்திடம் 530 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இந்த அதிகபட்ச ஆர்டரினால் இந்த 250 விமானங்களுக்கு 40% வரை தள்ளுபடி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close