Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெங்காயத்தை வைத்தே ஆன்லைன் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டம்

காய்கறி சந்தையில் கிலோ 100 ரூபாய்க்கு விற்கும் வெங்காயம் பாதி விலைக்கு கிடைக்கிறது என்றால் ஆச்சர்யம்தானே. அதைத்தான் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செய்து வருகின்றன. 

வெங்காயம், பெரும்பாலான உணவில் சேர்க்கப்படும் பொருளான இது, இந்தியாவின் முக்கிய நகரங்களில் 1 கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ஏறிய வெங்காய விலை இன்னும் குறையவில்லை. இப்படி கண்ணீர் வர வைக்கும் வெங்காயம் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆனந்தத்தைக் கொடுப்பதாய் மாறிவிட்டது.

லோக்கல்பனாயா, மேராகுரோசர், பிரஷ்பல்சாபிஸ்.காம் மற்றும் கிராசர்மேக்ஸ் போன்ற பல ஆன்லைன் மளிகை வர்த்தக நிறுவனங்கள் ஒரு கிலோ வெங்காயத்தை 40 ரூபாயிலிருந்து 69 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.

தங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க வெங்காய விலை ஏற்றத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இடைத்தரகர்கள் தலையீட்டு இல்லாமல், நேரடி கொள்முதல் மற்றும் நேரடி விநியோகம் என்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close