Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ. 6500 கோடியில் ஏரோஸ்பேஸ் கருவிகள் ஆலை: அம்பானி

னில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு நிறுவனமான ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நாக்பூரில் ரூ. 6500 கோடி முதலீட்டில் ஏரோஸ்பேஸ் கருவிகள் உற்பத்தி ஆலையை நிறுவ முடிவு செய்துள்ளது.


நிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம், பாதுகாப்பு மற்றும் வியாபார நோக்கிலான விமானங்களுக்குத் தேவையான பாகங்களையும் கருவிகளையும் உற்பத்தி செய்யும் தொழிலைச் செய்து வருகிறது. இப்போது நாக்பூரில் ஒரு உற்பத்தி ஆலையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. அந்த ஆலை திருபாய் அம்பானி ஏரோஸ்பேஸ் பார்க் என்று அழைக்கப்படும் என்றும் அதற்கு ரூ. 6500 கோடி ஒதுக்கப்பட உள்ளது என்றும் அனில் அம்பானி கூறியுள்ளார். 


இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தி ஆலையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக நாக்பூர் மாநில அரசு, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 289 ஏக்கர் நிலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற வகையில் வழங்கியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close