Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாவளிக்கு ரூ. 2000 கோடி டார்கெட்

ஃப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தீபாவளி விழாவுக்கு ரூ.2000 கோடி விற்பனையை இலக்காக வைத்துள்ளன.


தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களுக்கு மக்கள் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவது களைகட்டும். ஆனால் இப்போது ஆன்லைன் வர்த்தகங்களுக்கான வாய்ப்புகளும் வசதிகளும் அதிகரித்து வருவதால் எல்லோரும் ஆன்லைனில் பொருட்களை வாங்க துவங்கியுள்ளனர்.


ஆன்லைனில் கிடைக்காத பொருளே இல்லை என்பதாலும், உடகார்ந்த இடத்திலேயே பொருட்களைப் பார்ப்பது, தேர்வு செய்வது, பணம் செலுத்துவது என்று வசதிகள் விரல்நுனியில் வந்துவிட்டதால் மக்கள் ஆன்லைன் விற்பனைக்கு மாறிவருகிறார்கள்.


ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் ஃப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் போட்டிப் போட்டு விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு தீவிரமாக இறங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் வரும் தீபாவளிக்கு ரூ. 2000 கோடியை விற்பனை இலக்காக வைத்துள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close