Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10. வெளிநாட்டிலிருந்து என்ன கொண்டு வர முடியும்?

10. என் ஆர் ஐகளும் வரியும்

வெளிநாட்டிலிருந்து என்ன கொண்டு வர முடியும்?

-          ஆடிட்டர் ஜீ. கார்த்திகேயன், கோவை

கேரளாவிலிருந்த ருக்மணிக்கு ஆரம்பம் முதலே வெளிநாடு சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. பல காரணங்களால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது. தன்னால் முடியாததை தன் குழந்தையாவது அனுபவித்து விட வேண்டும் என்று எண்ணி, அவரது மகள் சிநிக்தாவை ஆஸ்திரேலியா அனுப்பி படிக்க வைத்தார். மெல்போர்ன் நகரில் ஆர்வத்துடன் படித்த சிநிக்தா, முன்னணி மாணவியாக திகழ்ந்தார். படித்து முடித்ததும் ஒரு நல்ல கம்பெனியில் அதிகாரியாக வேலையும் கிடைத்தது.

ருக்மணிக்கு பெருமையும் மகிழ்ச்சியும் பெருக்கெடுக்க ஆனந்த வெள்ளத்தில் திளைத்தார். என்னதான் ஸ்கைப்பில் (skype) தினமும் பேசி வந்தாலும் ருக்மணிக்கு மகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதோடு மட்டும் இல்லாமல், மெல்போர்ன் செல்லும் ஆசையும் கழுத்துவரை வந்துவிட ஆஸ்திரேலியா செல்ல தயாரானார் ருக்மணி. மகளுக்கு தேவையான பருப்பு பொடி, தேங்காய் பொடி, ஊறுகாய் என தானே தயார் செய்து அழகாக எடுத்து வைத்தார்.

 

ஆறு மாத விசாவில் அவர் கணவர் கிருஷ்ணனுடன் ஆஸ்திரேலியா பறந்தார். விமானம் தரையிரங்கினாலும் கால்கள் மட்டும் தரையில் படாமல் வாயெல்லாம் பற்களுடன் மெல்போர்னில் இறங்கினார் ருக்மணி. பெண்ணைப் பார்த்ததும் கண்கள் கலங்க,“பூசணிக்காயைப் போல் அனுப்பி வைத்தேன், இப்படி ஒட்டடை குச்சிபோல இருக்கிறாயே! என்று புலம்பினார். இருந்த 6 மாதத்தில் மகளை முடிந்தவரை தேத்திவிட்டு மனமில்லாமல் வீடு திரும்ப ஆயத்தமானார்.  

 

தனக்கும், தன் சகோதரிகளுக்கும் துணிமணி நகை என்று வாங்கி ஜமாய்த்துவிட்டார். லட்சத்திற்கு மேல், திகைத்து போகும் வரை ஷாப்பிங் முடித்தபின் சிங்கப்பூர் வழியாக இந்தியா திரும்ப ஆயத்தமானார். ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி வருது என்று கிண்டலடித் தகணவருடன் சேர்ந்து தானும் சிரித்துக்கொண்டார்.

 

இந்தியா வந்தவருக்கு விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதிக பெட்டிகள் கொண்டு வந்ததற்காக வரி செலுத்த வேண்டும் என்று கூறியதும் அதிர்ச்சி அடைந்தார். கஸ்டம்ஸ் அதிகாரியிடம் விசாரித்ததில் சரியான பாஸ்போர்டுடன், பொதுவாக இந்தியாவில் வசிக்கும் ஒரு இந்திய குடிமகன், மியான்மர், சீனா, பூட்டான், நேபாள் தவிர மற்ற நாடுகளில் இருந்து பின்வரும் அளவில் இந்தியாவிற்குள்  பேகேஜ் கொண்டு வர முடியும்
 

தனிப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் என்ன என்பது பற்றி பேகேஜ் சட்டத்தில் விவரமாக கூறப்படவில்லை. எனினும் பொதுவாக அத்தியாவசிய பொருட்களாகக் கருதப்படுபவை நகை அல்லாத, ஏற்கனவே உபயோகித்த உடை, சோப்பு, ஒப்பனைப் பொருட்கள், குடை, நடைக்கோல், தலையணை, போர்வை, செருப்பு, ஷூ போன்றவை. பல மின்னனு பொருட்களும், தளபாடங்களும் தனிப்பட்ட அத்தியாவசிய பொருட்ளாக கருதப்படாது.

வெளிநாட்டில் தொழில் செய்வதற்காக சென்று குறைந்தது 3 மாதங்கள் தங்கியிருப்பின், இந்தியா திரும்பும் போது வீட்டு உபயோகப் பொருட்கள் ரூ.12,000 மதிப்புள்ள வரையும், தொழில் சம்பந்தமான சாதனங்கள் ரூ.20,000 வரையும் எடுத்து வரலாம். குறைந்தது 6 மாதங்கள் தங்கியிருப்பின், இந்தியா திரும்பும் போது வீட்டு உபயோகப் பொருட்கள் ரூ.12,000 மதிப்புள்ள வரையும், தொழில் சம்பந்தமான சாதனங்கள் ரூ.40,000 வரையும் எடுத்து வரலாம். தொழில் சாதனங்களாக கேமராக்களும், கணினிகளும் வராது. அதாவது ஐ.டி துறையில் தொழில் செய்து வந்தாலும் கணினிகளை தொழில் சாதனங்களாக கருத இச்சட்டத்தில் இடமில்லை, அது தனிப்பட்ட அத்தியாவசிய பொருட்களுக்குள் அடங்கும்.

அனுமதிக்கப்பட்ட அளவுகளைத் தாண்டி எடுத்து வரும் பொருட்களுக்கு 36.05% கஸ்டம்ஸ் வரி செலுத்த வேண்டும்.

அடுத்ததாக, ரூ.5,000 வரை மட்டுமே இந்திய ரூபாயாக கொண்டு வர முடியும். அந்நியச் செலாவணிக்கு எந்த உச்ச வரம்பும் இல்லை. ஆனால், பணமாக $ 5,000 ற்கு மேலாகவோ,  பணமாகவோ மற்ற வகையிலோ $ 10,000 வரை கொண்டு வரலாம்.

இதையெல்லாம் கேட்டு அறிந்து கொண்ட ருக்மணி, கணவரிடம் “அவர் கேட்பதை கொடுத்துவிடுங்கள். வீட்டில் அக்கா மோர் குழம்போடு  நாம் வாங்கி வந்த பொருட்களுக்காக காத்திருப்பாள் என்றார். “முக்கால் லட்சம் ரூபாய்!! உலகம் சுற்றுவது ஒரு நிமிடம் நின்றே விட்டது. எதையும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செய்யும் கிருஷ்ணன், தான் யோசிக்காமல் நிறைய வாங்கி வந்து இப்படி மாட்டிக்கொண்டோமே என்று தன்னையே கடிந்து கொண்டார்.

ஆனால் வாங்கிய பொருட்களில் பாதி அவர் குவித்ததுதான் என்பதால் மனைவியையும் கடிந்து கொள்ள முடியவில்லை. சரி வேறு வழி என்ன என்று வரியை செலுத்திவிட்டு பொருட்களை எடுத்துச் சென்றார்.

(இந்தக் கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.)

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close