246 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது சந்தை
இந்திய பங்குச் சந்தைகள் இன்று(14 .09.2015) காலையில் கொஞ்சம் இறங்கி பின்னர் தொடர் ஏற்றத்தில் வர்த்தகமாகி ஏற்றத்திலேயே நிறைவடைந்தது. இன்றைய சந்தை முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 246.49 புள்ளிகள் உயர்ந்து 25,856.70என்ற நிலையில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 82.95 புள்ளிகள் அதிகரித்து 7,872.25 என்ற நிலையில் வர்த்தகமானது.
தங்கம், வெள்ளி மற்றும் கச்சா எண்ணெய் விலைகளில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.29% குறைந்து 66.3450 ரூபாயாக உள்ளது
என்டிபிசி, வேதாந்தா, டாடா ஸ்டீல் போன்றவற்றின் பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமான நிலையில், கெய்ரன் இண்டியா, ஐடியா செல்லுலார் , பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்த வர்த்தகமாகின.