Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முப்பது வயதாகிவிட்டதா.. சரியான வேலையில்லையா? இதப் படிங்க முதல்ல

முப்பது வயதை நெருங்கும் இளைஞர்களா நீங்கள், கவனமாக இருங்கள், இதுதான் நீங்கள் விழிப்படைய வேண்டிய சரியான நேரம்.


உங்கள் எதிர்காலத்தை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் அனுபவிக்க உங்களுக்கான சரியான வேலை எது என்பதை உங்களால் முடிவு செய்ய முடியாமல் இருக்கலாம். உங்கள் கனவுகளும் இலட்சியங்களும் உங்களை அலைக்கழிக்கலாம்.

ஏனெனில் இங்குப் பெரும்பாலானோருக்கு படித்த துறையிலோ பிடித்த துறையிலோ வேலை கிடைப்பதில்லை. வருமானத்திற்காக வேண்டி ஏதோ ஒரு இடத்தில் வேலை பார்க்க வேண்டிய சூழலில் தான் இருக்கிறோம். இந்த நூற்றாண்டு இளைஞர்களின் தலையாய கஷ்டம் இது.


கறை மட்டுமல்ல, கஷ்டமும் நல்லதுதான்!


30 வயதாகும் நீங்கள்,


இந்நேரம் பல வேலைகளுக்கு மாறியிருப்பீர்கள். இன்னும் நிரந்தரமான சரியான வேலை (நிறுவனமல்ல, வேலை செய்யும் துறை) கிடைக்கவில்லையா? அப்படியென்றால் உடனடியாக ஒரு தேடலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.


உங்கள் உள்மனம் எதை செய் செய் என்று நச்சரிக்கிறது என்று பாருங்கள். அதைக் கண்டுபிடித்து அதற்கான வாய்ப்பையும் இடத்தையும் தேடி பிடியுங்கள். 


'யாரோ ஒருவர், நான் அப்படி செய்தேன், ஜெயித்து விட்டேன்' என்று சொன்னதற்காக எதையும் செய்யாதீர்கள். உங்களுக்குள் ஒரு உள்ளார்வம் இல்லாமல் எதையும் செய்யாதீர்கள்.


இன்ட்ரஸ்ட் என்று செய்யும் வேலைகளில் உள்ள சவால்களை திட்டமிட்டு செயல்படுங்கள். உங்களுடைய இலட்சியம் வந்து உங்களுடைய மொபைல் பில் கட்டாது, நீங்கள் சாப்பிட்ட உணவுக்குப் பணம் தராது. உடல் நிலை சரியில்லை என்றால், மருந்து கொடுக்காது.

எல்லோருடைய வாழ்க்கையிலும், நம்முடைய இலட்சியம் நல்ல வருமானத்தை பெற்று தரும் நேரம் வரும். அந்த நேரத்திற்காகக் காத்திருங்கள். ஆனால் அதுவரை வருமானம் ஈட்டுவதை விட்டு விடாதீர்கள்.


உங்கள் இலட்சியத்தைப் பற்றிய கனவையும் முயற்சியையும் முன்னோக்கி எடுத்து செல்ல அந்த வருமானமே கைகொடுக்கும். இல்லையென்றால் நீங்கள் கொண்ட இலட்சியத்தை நீங்களே வெறுக்க ஆரம்பித்து விடுவீர்கள்.


செய்யும் தொழிலே தெய்வம் என்போம்!

இன்று வாழ்வதற்கு பணம் வேண்டும், நம் கனவுகளை நம்மோடு எடுத்து செல்லவும் பணம் வேண்டும். அந்தப் பணத்தை நமக்கு ஈட்டி தரும் எந்தத் தொழிலாக இருந்தாலும் அதைக் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது நேசித்து விடுங்கள். அதுவே உங்களை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்லும்.


- ஜெ. சரவணன்


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close