Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்கா, சீனாவை முந்தி முதலிடத்தில் இந்தியா

அந்நிய முதலீடுகளைப் பெறுவதில் அமெரிக்கா மற்றும் சீனாவை முந்தி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2015 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் உலக நாடுகளில் செய்யப்பட்ட முதலீட்டு அளவுகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் இந்தியா அமெரிக்காவை விட 4 பில்லியன் டாலரும், சீனாவை விட 3 பில்லியன் டாலர் அதிகமான அந்நிய முதலீட்டைக் கவர்ந்து 31 பில்லியன் டாலர் என்ற நிலையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியா 31 பில்லியன் டாலரும், சீனா 28 பில்லியன் டாலரும், அமெரிக்கா 27 பில்லியன் டாலரும், பிரட்டன் 16 பில்லியன் டாலரும் பெற்றுள்ளது. இதன் பின் மெக்சிகோ 14 பில்லியன் டாலர், இந்தோனேசியா 14 பில்லியன் டாலர், வியட்நாம் 8 பில்லியன் டாலர், ஸ்பெயின் 7 பில்லியன் டாலர், மலேசியா 7 பில்லியன் டாலர். ஆஸ்திரேலியா 7பில்லியன் டாலர் ஆகிய நாடுகள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மத்திய அரசின் தொடர் திட்டங்களின் மூலம் இந்திய சந்தை அதிகளவிலான அந்நிய முதலீட்டை பெற்று வருகிறது. இதில் மேக் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close