Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐஐடி கல்வி கட்டணம் மூன்று மடங்கு உயர்வு?

இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களாகக் கருதப்படும் ஐஐடி கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்கான கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஐஐடி கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப் படிப்புகளுக்குக் கட்டணம் தற்போது ரூ. 90,000 ஆகும். இக்கட்டணத்தை ரூ. 2.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஐஐடி கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஐஐடியில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ. 3.5 லட்சம் வரை செலவு செய்கிறது. ஐஐடிகளில் 90 சதவிகித கட்டண சலுகை 22 சதவிகித ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தரப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சத்திற்கும் கீழ் வருமானம் வாங்கும் பெற்றோர்களின் மாணவர்களுக்கும் 90 சதவிகித கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. 53 சதவிகித மாணவர்கள் மட்டுமே முழு கட்டணத்தையும் செலுத்தி வருகிறார்கள். 


இந்தக் கட்டண உயர்வை சமாளிக்கும் வகையில் வட்டியில்லா கடன் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close