Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேஃப் காஃபி டே புதிய பங்கு வெளியீடு

 
இந்தியாவின் மிகப்பெரிய காஃபி ரெஸ்டாரண்ட் செயினான கேஃப் காஃபி டே 1,150 கோடி ரூபாயை புதிய பங்குகள் வெளியீடு மூலம் திரட்ட உள்ளது. 14 அக்டோபர் 2015ல் தொடங்கி 16 அக்டோபர் 2015 வரை இந்த புதிய பங்குகளை வாங்கலாம். ஒரு பங்கின் விலை ரூபாய் 316 - ரூபாய் 328 வரை இருக்கும். குறைந்தபட்சம் 45 பங்குகளை வாங்க வேண்டும்.
 
இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் மட்டும் 1,500 கடைகள் இருக்கின்றன. ஆஸ்திரேலியா, மலேசியா,  போன்ற வெளிநாடுகளில் 14 கடைகள் இருக்கின்றன. இந்த புதிய பங்கு வெளியீடு மூலம் திரட்டப்படும் பணம் இன்னும் பல புதிய கடைகளை திறப்பதற்கும், ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைப்பதற்கும் பயன்படுத்தப்பட இருப்பதாக அதன் ப்ராஸ்பெக்டஸ்ஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
இந்த நிறுவனத்தின் முதல் கடை 1996ஆம் ஆண்டு பெங்களூரூவில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் காஃபி சந்தை 1800 கோடி ரூபாய் மதிப்புடையது, வருடத்திற்கு 20 சதவிகித வளர்ச்சியில் காஃபி சந்தை வளர்ந்து வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close