Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக வாய்ப்புகள்

தோஹா வங்கி மற்றும் சென்னை வர்த்தக கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த  "இந்தியா கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக வாய்ப்புகள் " என்கிற தலைப்பில் தோஹா வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர்.ஆர்.சீதாராமன் உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையில் இருந்து ‘’கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புகளை இந்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது இந்தியாவின் வளர்ச்சியை அனைத்து உலக நாடுகளும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் பல சர்வதேச அமைப்புகள் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7 - 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். இதுவே இந்தியாவில் இருக்கும் திட்டங்களை எல்லாம் சரியாக நடைமுறைப்படுத்தினால் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 9 - 10 சதவிகிதம் வரை கூட அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
 
வரும் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியினை நடத்தும் பொன்னான வாய்ப்பினை கத்தார் நாடு பெற்றிருக்கிறது. இந்த தருணத்தில் கத்தார் நாட்டில் உள்ள வாய்ப்புகளை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் தொழில்களை இந்தியாவில் மட்டும் செய்து வந்தால் போதாது, உங்கள் தொழிலை விரிவுபடுத்த வேண்டும். நீங்கள் செய்யும் தொழிலை கத்தாரிலும் செய்ய முன் வந்தால் இந்தியாவில் கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டியை விட நிச்சயமாக 2 - 3 சதவிகிதம் வட்டி குறைவாக கடன் கிடைக்கும். 
 
கத்தார் மற்றும் வளைகுடா நாடுகளில் பணம் இருக்கிறது, பணியும் இருக்கிறது. அந்த இரண்டையும் உங்களுடையதாக்கிக் கொண்டு உங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதித்துக் கொள்ள இதை விட சிறந்த அடிப்படை பொருத்தம் வேறு எதுவும் இல்லை" என்றார்.
 
"தற்போது கத்தார் நாட்டில் உள்கட்டமைப்புகள் மிக பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. விமானம், கப்பல், ரயில், தரைவழி போக்குவரத்து தொழில்கள், உணவகங்கள், சினிமா அரங்குகள் அமைப்பது, வணிக தளங்கள், குடியிருப்புகள், தகவல் தொழில்நுட்பம், ஜவுளி போன்ற துறைகளிலும் எண்ணற்ற தொழில் வாய்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நான் ஒரு தமிழனாக, இந்தியனாக இருப்பதால் இந்திய தொழில் முனைவோர் அனைவருக்கும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் தோஹா வங்கியின் மூலம் செய்ய காத்திருக்கிறேன் என்று கூறினார். அவர் ஆற்றிய உரைக்கு பின் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close