Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினமும் 10,000 நிறுவனங்கள்: சீனா அதிரடி

பொருளாதார மந்த நிலையை சமாளித்து நாட்டின் பொருளாதாரத்தை முடுக்கிவிடும் வகையில் சீன அரசு தொழில்முனைவுக்கு ஊக்கம் கொடுத்துவருவதால் ஒவ்வொரு நாளும் 10,000 புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இதுவரை 60 லட்சம் புதிய நிறுவனங்கள் தொடங்கபட்டுள்ளன.


 

இது குறித்து சீனாவின் தொழில்துறை இணை அமைச்சர் ஜின் குவோபின் கூறியதாவது:

பொருளாதாரத்தை வளர்க்க வேண்டிய காலம் இது. இதற்காக அரசாங்கம் கட்டணங்கள் மற்றும் வரிகளை குறைத்திருக்கிறது. இதனால் சிறிய நிறுவனங்களுக்கு நடப்பு ஆண்டில் முதல் பாதியில் 790 கோடி டாலர் தொகை மீதமாகி இருக்கிறது. சிறு நிறுவனங்களுக்கு 14.5 சதவீதம் அளவுக்கு கூடுதலாக கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார மந்த நிலை நிலவுவதால் புதிய நிறுவ னங்கள் தொடங்குவதற்கு ஊக்குவித்தோம். அதற்கான பிரசாரங்களை மேற்கொண்டோம். இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சியை பயன்படுத்தி புதிய நிறுவனங்கள் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு ஜின் குவோபின் தெரிவித்தார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close