Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி ஒரே போனில் 2 வாட்ஸ்-ஆப், 2 ஃபேஸ்புக்?

இன்று எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் பல மொபைல் எண் (சிம்) தேவையாக இருக்கிறது. அதனால் எல்லோரும் இரட்டை சிம் போடக்கூடிய ஆண்ட்ராய்ட் மொபைல்களையே வாங்குகிறார்கள். ஆனால் இதில் ஒரே ஒரு வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் தான் பயன்படுத்தும் நிலை இருந்தது.


பலருக்கு இரண்டு எண்களிலும் வாட்ஸ் ஆப் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம் இருந்திருக்கலாம். அந்த ஏக்கத்திற்கு இப்போது தீனிப் போட்டிருக்கிறது டிசா (Disa) என்ற புதிய செயலி.


இதன்மூலம் ஒரே மொபைலில் தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் அலுவலகப் பயன்பாட்டிற்கும் என இரண்டு வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் இயக்கிக்கொள்ள முடியும்.
எப்படி?


உங்களிடம் டூயல் சிம் ஆண்ட்ராய்ட் மொபைல் இருந்தால், கூகுள் ப்ளேஸ்டோரில் டிசா (Disa) என்ற ஆப்பை சர்ச் செய்து தரவிறக்கம் செய்யுங்கள்.


அதில் ‘+’ என்ற தேர்வை அழுத்தி, அதில் வாட்ஸ் ஆப் பயன்பாட்டில் இல்லாத உங்களது இரண்டாவது மொபைல் எண்ணை ‘+91’ என குறியீட்டோடு (உதாரணம்: +91 82208*****) தந்து லாக்-இன்(Login) செய்து,  வெரிஃபை செய்து கொண்டால் ஒரே நேரத்தில் இரண்டு எண்களுக்கு தனித்தனியாக வாட்ஸ் ஆப் பயன்படுத்த உங்கள் மொபைல் தயாராகிவிடும்.


அதே போல் ஃபேஸ்புக் இணைப்பையும் இந்த செயலியில் தேர்ந்தெடுத்து ஒரே நேரத்தில் இரண்டு ஃபேஸ்புக் பார்த்துக்கொள்ளலாம்.


ஆனால் டிசா செயலியில் வாட்ஸ்-ஆப் மூலம் செய்திகள், புகைப்படங்கள்  மற்றும் வீடியோ மட்டுமே  அனுப்ப  முடியும். வாட்ஸ்-ஆப் கால்கள் (Whatsapp call) செய்ய முடியாது.


டிசா செயலியை பதிவிறக்கம் செய்ய இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்: https://goo.gl/bW2ELo

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close