Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

[X] Close

மேகி நூடுல்ஸ் : 5 நிமிடங்களில் 60,000 பாக்கெட்டுகள் விற்பனை

ஆன்லைனில் மேகி விற்பனை தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் சுமார் 60 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது.
 
மேகி நுாடுல்ஸ் உணவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், காரீயம் மற்றும் ரசாயன உப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்தது.
 
இதனைத் தொடர்ந்து மேகி நுாடுல்ஸ் பாதுகாப்பற்றது, உடல் நலனுக்கு தீங்கானது எனக் கூறி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அதற்கு தடை விதித்தது.
 
பரிசோதனைக் கூடங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மேகி நுாடுல்ஸ் மாதிரிகள் அனைத்தும் பாதுகாப்பானவை எனச் சான்றளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் ஸ்நாப்டீல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஆன்லைனில் மேகி நூடுல்ஸை விற்பனையை நெஸ்லே இந்தியா துவங்கியது. 
 
ஆன்லைனில் விற்பனை தொடங்கிய 5 நிமிடங்களிலேயே சுமார் 60 ஆயிரம் மேகி பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close