Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

[X] Close

நாளை முதல் ஹோட்டல் பில், செல்போன் கட்டணம் அதிகரிக்கும்!

தூய்மை இந்தியா திட்டத்துக்காக, சேவை வரியை 0.5 சதவிகிதம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இது, நாளை முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த மே 31–ம் தேதி வரை 12.36 சதவீதம்தான் சேவை வரி விதிக்கப்பட்டது. அதன்பின் சேவை வரி 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.

இப்போது, 'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக, மக்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சேவைகள் மீது விதிக்கப்படும் சேவை வரியை மத்திய அரசு 0.5 சதவிகிதம் உயர்த்தி உள்ளது.

இந்த 0.5 சதவிகித சேவை வரி உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த 0.5 சதவிகித சேவை வரி உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக செலவிடப்பட உள்ளது.

சேவை வரி உயர்வின் மூலம் தொலைபேசி கட்டணம், சுற்றுலா கட்டணம், காப்பீடு கட்டணம் உள்ளிட்ட பல சேவை சார்ந்த கட்டணங்கள் உயரும்.

நாளை முதல் ரெஸ்டாரன்ட் சேவை வரி தற்போதுள்ள  5.6 சதவிகிதத்தில் இருந்து 5.8 சதவிகிதமாக உயரும். அதேநேரத்தில், நவம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக செலுத்தப்படும் கட்டணங்களுக்கு வரி சேராது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close