Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் கனமழை: ஐபிஎம், காக்னிசன்ட், இன்போசிஸ் ஊழியர்கள் பெங்களூக்கு டிரான்ஸ்பர்!

சென்னையில் தொடர் மழை காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பெங்களூருக்கு இடம் மாற்றத் தொடங்கியுள்ளன.

கடந்த பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களின் பணிகள் பாதிப்படைந்தன. இதனால் சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு அறிவித்திருந்தன. சில ஐடி நிறுவனங்கள் தங்கள் மூத்த ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றவும் அனுமதி அளித்தன.

இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் பணியை முடித்துகொடுக்க முடியாமல் சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் தவித்து வருகின்றன.

இதனால், ஐபிஎம், காக்னிசன்ட், இன்போசிஸ் மற்றும் இதர நிறுவனங்கள் தங்கள் முக்கிய ஊழியர்களை பெங்களூருக்கு இடம் மாற்றத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close