Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் அதிகம் பேர் பார்க்கும் இணையதளம் எது தெரியுமா?

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்களில் அமேசான் இந்தியா இணைய தளத்தை அதிகம் பேர் பார்த்திருப்பதாக இணையதள அனலிட்டிக்ஸ் நிறுவனமான காம்ஸ்கோர் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் 8.5 கோடி பேர் அமேசான் இந்தியா இணைய தளத்தை பார்த்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு இணையதளம் மற்றும் மொபைல் மூலமாக இதன் இணையதளத்தை 20 கோடி பேர் பார்த்துள்ளதாக காம்ஸ்கோர் தெரிவித்துள்ளது.

இதே மாதத்தில் பிளிப் கார்ட் இணையதளத்தை 16.4 கோடி பேரும்,  ஸ்நாப்டீல் இணையதளத்தை 10.9 கோடி பேரும் பார்த்திருக்கின்றனர்.

சென்ற ஆண்டு அதிகம் பேர் பார்வையிடும் இ-காமர்ஸ் இணையதங்களில் பிளிப்கார்ட் முதலிடத்தில் இருந்தது. இப்போது, அமேசான் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close