Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருமான வரி செலுத்துவோருக்கு புதிய நடைமுறை அறிமுகம்

வருமான வரி தொடர்பான வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் வருமான வரி செலுத்துவோர் இமெயில் மூலமாக வருமான வரித்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இது அதிகாரபூர்வமான தகவலாக சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி வருமான வரி தொடர்பான வேலைகள், புகார்கள் மற்றும் துன்புறுத்தல்களை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இனி இமெயில் மூலமாக வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தலாம். இதன் மூலம் வருமான வரி செலுத்துவோரின் நேரம் மிச்சமாகும்.

புதிய நடைமுறையின்படி வருமான வரி செலுத்துவோர் அல்லது வரி செலுத்தும் நிறுவனங்கள், வருமான வரித்துறைக்கு அனுப்பும் இமெயில்கள் இனி அதிகாரபூர்வமான தகவலாக எடுத்துக்கொள்ளப்படும்.

இதற்கு முன்னர் கூரியர், அஞ்சல் மூலமாக அனுப்புவது அதிகாரப்பூர்வ தகவலாக வருமான வரித்துறை எடுத்து வந்தது. இப்போது இமெயில் மூலமாக அனுப்பப்படும் தகவல்களையும் அதிகாரபூர்வமான தகவலாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close