Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நவம்பரில் 7.65 லட்சமாக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, நடப்பு ஆண்டு நவம்பரில் 8.15 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் அமெரிக்கா 15.76 சதவிகித பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, வங்கதேசம், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் உள்ளன.

அதேசமயம் கடந்த ஆண்டு நவம்பரை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு நவம்பரில் அதிகரித்த போதிலும், வருவாய் குறைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைத்த அன்னியச் செலாவணி வருவாய் 2014 நவம்பரில் ரூ.12,988 கோடியாக இருந்தது. இது கடந்த மாதத்தில் 10.6 சதவிகிதம் சரிவடைந்து ரூ.11,610 கோடியாக குறைந்துள்ளதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close