Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பங்குச் சந்தையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ.68,924 கோடி முதலீடு

நடப்பு நிதி ஆண்டில் உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இதுவரை  ரூ.68,924 கோடி முதலீடு செய்துள்ளதாக இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) தெரிவித்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டி அதனை பங்குகள், கடன் பத்திரங்கள், நிதிச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்து வருகின்றன.

இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆர்வமாக ரூ.68,924 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள்  ரூ.15,136 கோடி அளவில்  மட்டுமே பங்குகளை வாங்கியுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close