Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் ஏற்றுமதி: தொடர்ந்து 12 மாதமாக நவம்பரிலும் குறைந்தது!

சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நவம்பர் மாதத்திலும் சரிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களாக நாட்டின் ஏற்றுமதி அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. சர்வதேச அளவில் தேவைப்பாடு மந்தமாக இருப்பதால் நாட்டின் ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் 24 சதவிகிதம் சரிந்து 2 ஆயிரம் கோடி டாலராக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நவம்பரில் 2 ஆயிரத்து 600 கோடி டாலராக இருந்தது.

அதேசமயம் இறக்குமதியும் கடந்த நவம்பரில் 30 சதவிகிதம் சரிந்து 2 ஆயிரத்து 900 கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 4 ஆயிரத்து 200 கோடியாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை குறைவு, நிலக்கரி, தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி குறைவால் வர்த்தகப்பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close