Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

[X] Close

செயல்படாத வங்கிக் கணக்கு வைத்துள்ளவர் விவரம் வெளியிட்டது சுவிஸ் வங்கி! பட்டியலில் 6 இந்தியர்கள்

சுவிட்சர்லாந்து அரசு இதுவரை செயல்படாத வங்கிக் கணக்கு வைத்துள்ள 2 ஆயிரத்து 600 பேரின் விவரங்களை  வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள 2 ஆயிரத்து 600 பேரின் கணக்குகளில் மொத்த தொகையாக 300 கோடி ரூபாய் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 6 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள 6 பேரில் 4 பேரின் இருப்பிடம் இந்தியா என்றும் 5வது நபரின் இருப்பிடம் ப்ரான்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 6வது இந்தியரின் இருப்பிடம் பற்றி தெரிவிக்கப்படவில்லை.

6 இந்தியர்களில் பெர்ரி வாசக், சார்லட் ஸ்பென்சர், ரோஸ்மேரி பெனட் ஆகிய மூன்று பேரின் இருப்பிடம் மும்பை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பகதூர் சந்திர சிங் என்பவர் டேராடூனைச் சேர்ந்தவர் எனவும், மோகன் லால் என்பவர் பாரீசைச் சேர்ந்தவர் என்றும் சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. 

இந்த 2 ஆயிரத்து 600 பேரின் வாரிசுகள் ஓராண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை கோர வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close