Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

[X] Close

வெள்ள பாதிப்புகளை பார்வையிட வருகிறார் அருண் ஜேட்லி!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளை பார்வையிட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாளை (19.12.15) சென்னை வருகிறார்.

 

தமிழக வெள்ள சேதங்களை பிரதமர் மோடி தனி விமானம் மூலம் அரக்கோணம் வந்தடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படைந்த இடங்களை கடந்த டிசம்பர் 3-ம் தேதி பார்வையிட்டார்.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிர்சாலைகளை பார்வையிடுவதற்காக நாளை வருகிறார். இதை இன்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சென்னையில் முக்கியமான தொழில்துறை பகுதிகள் உள்ளன. இங்கு கனமழையால் பாதிப்படைந்த தொழிற்சாலைகள் பழைய நிலைக்கு திரும்ப தேவையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று நம்புகிறேன். மத்திய அரசும் போதுமான ஒத்துழைப்பு நல்கும் என்று நாடாளுமன்றத்தில் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிர்சாலைகளை பார்வையிட்ட பின் தமிழக முதல்வரை அருண் ஜேட்லி சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close