Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம்; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுமா?

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று(23-12-16) ரஷ்யா செல்கிறார். இந்த பயணத்தில் இந்தியா - ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.


 

பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்யா பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது  பல்வேறு ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-ரஷ்யா இடையே அணுசக்தி, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கடந்த  ஜூலை மாதம் ரஷ்யாவின் உபா நகரில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். தற்போது 2வது முறையாக மோடி ரஷ்யா செல்கிறார். இவருடன் தொழிலதிபர்கள்  உடன் செல்வது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close