Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து பெட்ரோலியப் பொருட்களுக்கு சிறிது காலம் விலக்கு!

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதாவை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு சிறிது காலம் விலக்கு அளிக்கப்பட இருப்பதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி அளித்திருக்கிறார். அரசியல் சட்டரீதியாக பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரிக்கு வருகிறது. எனினும் அவற்றின் மீது மத்திய, மாநில அரசுகள் வரி விதிக்கும் நடைமுறை தொடரும். எனினும் ஜிஎஸ்டி இருந்து பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு சிறிது காலம் விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரவிந்த் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close