Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசிஎஸ் லாபம் ரூ.6,083 கோடியாக உயர்வு

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளையும் தாண்டி டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் நிகர லாபம் 14 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது.


நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் ரூ.6,083 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. டிசிஎஸ் கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ரூ.5,328 கோடியை லாபமாக ஈட்டியது. இப்போது டிசிஎஸ் நிகர லாபம் 14.2 சதவிகிதம் உயர்ந்து ரூ.6,083 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 11.7 சதவிகிதம் அதிகரித்து ரூ27,364 கோடியாக உள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close