Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

[X] Close

மளிகைப் பொருட்கள் வீட்டிற்கே டெலிவரி; அமேசான் திட்டம்

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் விரைவில் மளிகைப் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இதுவரை புத்தகங்களும், எலக்ட்ரானிக் பொருட்களும், ஆடைகளும் என விற்பனை செய்து வந்தன. ஆனால் பெப்பர்டேப், குரோஃபர்ஸ் ஆகியவை மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தன. ஆனால் மளிகைப் பொருட்களை ஆன்லைனில் விற்பது மிகவும் சிரமமாக இருப்பதால் அவை இந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டன.

இந்த நிலையில் அமேசான் இந்தியா நிறுவனம் மளிகைப் பொருட்களை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மற்ற பொருட்களைப் போல மளிகைப் பொருட்களை ஆன்லைனில் விற்பது சாதாரண விஷயமில்லை என்று கிராண்ட் தார்ன்டன் இந்தியா கன்சல்டன்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஹரிஷ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close