Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் சொத்தினை விற்பனை செய்கின்றீர்களா ? - லாபம் பத்திரம்

- கே. அழகுராமன், வழக்கறிஞர்


பத்து வருஷம் முன்னாடி வாங்கிய சொத்து. நல்ல விலை போகுது. மகளின் திருமணத்தை அடுத்த வருடம் பிரச்சினை ஏதுமின்றி  நடத்திவிடலாம்.... ஆறு மாத அக்ரிமென்ட் பீரீயட்தானே கேக்குறாங்கன்னு நெனச்சு அட்வான்ஸ் வாங்குனதுதான்  பிரச்னையாப் போச்சு... ரொம்ப  சாதாரணமாகிவிட்ட  டயலாக் இது .

உங்கள் எதிர்கால பாதுகாப்புக்காக வாங்கிய சொத்து, உங்களுக்கே பிரச்னையாகி போவதற்கு வாய்ப்புகள் அதிகம். காரணம், சொத்தின் அபரிமிதமான விலை ஏற்றம், உங்களின் அவசரத் தேவை, தரகர்களின் தயவு, தாட்சன்யமற்ற வியாபார பாங்கு. உங்கள் சொத்திற்கான லாபம் உங்களை சரியாக வந்தடைய என்ன செய்ய வேண்டும்.?

முதலில் உங்கள் சொத்தினை விற்பனை செய்வதென தீர்மானித்து விட்டால், அதற்கென வாங்கும் தகுதியுடைய நபர்கள் உள்ளனரா? என்பதை பார்த்தல் வேண்டும். இதற்கென விளம்பரம் கொடுத்தும்  கிரயம் செய்ய முயற்சிக்கலாம். அதிக விலை போகும் என ஆசை வார்த்தைகள் கூறி அதற்கு சொத்தின் அனைத்து ஆவணங்களையும் தரும்படி கட்டாயப்படுத்தும்  தரகர்களின் மதி மயக்கும் வார்த்தைக்கு மயங்காதிருத்தல் முற்றிலும் நல்லது. நீங்கள் பார்த்து விற்பனை செய்வதில்  சில ஆயிரங்களே குறைந்தாலும் கூட, பல பிரச்னைகளை அது தவிர்த்துவிடும்.


 

சரி. சொத்தினை வாங்குவதற்கு நபர் கிடைத்தாயிற்று. அடுத்து என்ன செய்ய வேண்டும்.?
சொத்து விற்பனைக்கு உங்களால் நிர்ணயம்  செய்யப்படும் விலைக்கு கிரய ஆவணம் தயாரிப்பது வாங்குவோரின் வேலை. அவரின் வருமானவரி நிரந்தர கணக்கு எண்ணை கிரயப்பத்திரத்தில் குறிப்பிட்டு , உங்களுக்கு கொடுக்கப்படும் கிரயத்தொகை செலுத்தப்பட்ட விதத்தையும், காசோலை/ரொக்கம்/ ஆர் டி ஜி எஸ்/ விவரங்களை கிரயபத்திரத்தில் குறிப்பிட்டு கிரயம் செய்து கொடுத்தல் மிகவும் நல்லது.  பிற்பாடு, வருமானவரி கணக்கு தாக்கலின் போது, அந்த வருமானத்தைக் காட்ட கிரயப்பத்திரத்தில்  குறிப்பிட்டுள்ள பணப்பற்று விவரங்களை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். வருமான வரித்துறையும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளும்.

விலை நிர்ணயம்:

நீங்கள் சில ஆயிரங்கள் கொடுத்து இன்று, பல லட்சங்களுக்கு விற்பனையாகும்  என்பதில் சந்தேகமில்லை.  இதற்கென விக்கிரயத் தொகையை நிர்ணயிக்க "அரசு வழிகாட்டு மதிப்பை " ஒரு வழிகாட்டியாக வைத்து நீங்கள் மதிப்பிடலாம்.
அரசு குறிப்பிட்டுள்ள மதிப்பானது, காலி மனைக்கே.  அதில் உங்களால் அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பின்  அதன் செலவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். மின் இணைப்பு, காம்பௌண்டு சுவர் போன்ற இதர செலவுகள் இருந்தால் அதனையும் கணக்கிடலாம்.

கிரயம் (Sale) :-

விலை நிர்ணயிக்கப்பட்ட பின்பு கிரயம்.  ஒரு கிரயம் என்பது தக்க பிரதி பலன் கொடுத்து வாங்குபவரால் வாங்கப்படுவது. அது அசையாச் சொத்தாக இருக்கும்பட்சத்தில் பதிவு அவசியம். இது தான் அடிப்படை. இந்த அடிப்படை விஷயத்தில்தான்  பிரச்னையே ஒளிந்திருக்கும். அதிக விலை தர நான் ரெடி. ஆனால்  ஆறு மாத கால அவகாசம் வேண்டும். அதுவரை ரூபாய் 10,008/-  அட்வான்ஸ் கொடுத்து,  வெறும் 20 ரூபாய் தாளிலேயே கிரய உடன்படிக்கை செய்து கொள்வோம் என மிக சாதாரண வார்த்தைகளில் நிகழும் கிரயம் பிரச்னைகளிலேயே முடிய வாய்ப்புகள் அதிகம்.

தற்போது,  சட்டப்படி எல்லா வகை ஆவணங்களையும் பதிவு செய்தல் அவசியம். கிரய உடன்படிக்கை உட்பட. எனவே பதிவு செய்யாத ஆவணங்களால்  ஏற்படுத்தப்படும்  கிரய உடன்படிக்கை செல்லாதென வாதிட்டு, அட்வான்ஸ் கொடுத்திருந்த நபர் பொய்யான  தகவல்களை கூறி, நீங்கள் உங்கள் சொத்தினை வேறு எவருக்கும் விற்க இயலாதவாறு தடை கோரி, வழக்கு தாக்கல் செய்ய அதிக வாய்ப்புள்ளது. 

பல சொத்துக்களை, சில காலம், இது போல்  தாமதப்படுத்துவதன்மூலம், வாங்குவதாக வந்த நபருக்கு, மேலும் சில ஆண்டு கால அவகாசம் கிடைப்பதன் மூலம், Money Rotation  எனப்படும் பணச்சுழற்சி  செய்வதற்கு அதிக அவகாசம் பெற்று விடுவர். அதன் பின்பும் , அந்த நபர்,  தான் குறிப்பிடும்  நபருக்கு பொது அதிகாரம் மட்டும்  கொடுத்து விடும்படி  மன்றாடுவார் . அதனை முற்றிலும்  மறுத்தல்  நல்லது. பவர்  கொடுத்தால் அதன் மூலம், பவர்  பெற்ற  நபர் உங்கள் முகவராக  செயல்பட  அதிகாரம்  பெற்றவராகிறார். எனவே, பிற்காலத்தில்  அவரது  செயல்பாடுகள்  என்னவென  உங்களுக்கு தெரிவதற்கு  வாய்ப்பே  இல்லாமல்  போய்விடும்.  உங்கள் சொத்து அந்த சுழலில் சிக்கி, உங்களது "எதிர்கால பாதுகாப்பு" என்ற கோட்பாட்டில் கிரயம் பெறப்பட்ட உங்கள் சொத்து உங்களை பாதுகாப்பதில் கோட்டைவிட்டுவிடும்.

நம் சொத்து நம்மை பாதுகாக்க வேண்டும். நாம் அதனை பாதுகாக்க நீதிமன்றம், போலீஸ் என செல்வது நமக்கு மன உளைச்சலே.  இந்த சொத்தே வேண்டாம், நிம்மதியே போதும் என்ற மன நிலைக்கு தள்ளப்படுவோம்.

இதனை தவிர்க்க, கிரய உடன்படிக்கையே இல்லாத, தரகரில்லா, மூன்றாம் நபரில்லா, பொது அதிகாரம் எனப்படும் power of  attorney   இல்லா, நேரடி, உடனடி, கிரயமே(Direct Immediate Sale) சிறந்தது.   உங்கள் லாபம்  குறைவென்றாலும்   உங்களை  உடனடியாக  வந்தடையும் .

என் சொத்தை விற்க வேண்டாம்.  கட்டலாம்  என்ற எண்ணத்தில் உள்ளவரா  நீங்கள். ?

பாதுகாப்பாக    கட்டுவோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close