Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்!’’ - எம்எஸ்எம்இ எதிர்பார்ப்பு

பட்ஜெட் 2016-17... தொழில் துறை எதிர்பார்ப்புகள் - 9

‘‘வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்!’’

முத்துச்சாமி, தலைவர், டான்ஸ்டியா.


‘‘மேக் இன் இந்தியா திட்டத்தில் உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனங்களில் எஸ்எம்இ-களின் பங்களிப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஒற்றை சாளர முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதுவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயனளிக்கும் விதமாக நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் வாராக்கடன் கெடுவை 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

இது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த பட்ஜெட்டிலாவது அமல்படுத்த வேண்டும். தவிர, தொழில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த பட்ஜெட்டிலாவது அரசு குறைக்க வேண்டும். சிறு நிறுவனங்களுக்கு கலால் வரி விலக்கு வரம்பை ரூ.1.5 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக அதிகரிக்க வேண்டும்.’’

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close