Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லிக்விட் ஃபண்டுகள்

லிக்விட் ஃபண்டுகள்
 
'கையில இருக்கிற பணத்தை, சும்மா பத்து நாள், இருபது நாளைக்கு மட்டும் ஏதாவது மியூச்சுவல் ஃபண்டுல போடலாமா..?'னு கேட்டா, அதுக்குப் பதில் சொல்றதுதான் இந்தத் திட்டம். 7, 10, 15 நாட்களுக்குக் கூட இந்த வகை ஃபண்டுல பணத்தைப் போடலாம்.

மத்த மியூச்சுவல் ஃபண்டுல போட்ட பணத்தை எடுக்கணும்னா, எழுதிக் கொடுத்ததுலேர்ந்து 2, -3 நாட்களாவது ஆகும்.

ஆனா இந்த ஃபண்டுல காலையில எழுதிக் கொடுத்தா, சாயங்காலம் பணத்தை வாங்கிடலாம். பேங்க்குல போடறதை விட இரண்டிலிருந்து மூணு சதவிகிதம் அதிக வருமானம் கொடுக்குறதா இருக்கும். இதை 'நிதிச் சந்தை ஃபண்டுகள்'னும் சொல்லுவாங்க.

முதலீட்டுக் காலம் ரொம்ப கம்மியா இருக்குறதால, இதுக்கு டிவிடெண்ட் விநியோக வரி விதிக்கப்படுது. சர்சார்ஜ், கல்வித் தீர்வையும் உண்டு. இதை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமே, அரசுக்குக் கட்டிட்டு மீதியைத்தான் முதலீட்டாளர்களுக்குத் தரும்.

யாருக்கு ஏற்றது?:

குறுகியகாலத்துக்கு பணத்தைப் போட்டுவைக்க நினைப்பவர்களுக்கு.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close