Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதுவரை தொடங்கப்படாத மாவட்டங்களில் நவோதயா!

2016 - 17-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.


மத்திய அரசாங்கம் நடத்தும் நவோதயா பள்ளிகள் தற்போது பல மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நவோதயா பள்ளிகள் இதுவரை தொடங்கப்படாத மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இதற்காக 62 புதிய நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்து இருக்கிறார்.


உலகத் தரத்திலான கல்வி மற்றும் ஆய்வினை செய்வதற்காக பத்து அரசு மற்றும் பத்து தனியார் கல்வி நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும்.


உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவியருக்கு நிதி உதவி செய்வதற்காக ரூ.1000 கோடி செலவில் புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.


கல்வி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் பதிந்து வைத்துக் கொள்வதற்காக தனியாக ஒரு செக்ரியூட்டிஸ் டெபாசிட்டரி அமைப்பு உருவாக்கப்படும் எனவும் மத்தி நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close