Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

[X] Close

உற்சாகத்தில் எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கள்... என்ன தான் காரணம்?

மத்திய அரசின் 2016 - 17 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 29 அன்று தாக்கலானது. அதில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு இதுவரை ஒதுக்கப்படாத அளவில் அதிக தொகையாக 38,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

குறைவான மழைப் பொழிவு மற்றும் இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் கடந்த காலங்களில் கிராமப்புற மக்களின் வருமானம் குறைந்து இருந்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை 15 - 18 சதவிகித அளவுக்கு வளர்ந்து வந்த எஃப்.எம்.சிஜி நிறுவனங்கள் வளர்ச்சி 10 - 11 சதவிகிதங்களில் மட்டுமே வளர்ந்தது. 

இந்தநிலையில் தற்போது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பெரும்தொகை மூலம் மீண்டும் கிராமப்புற மக்களின் கையில் அதிக பணம் புரளும். எனவே மீண்டும் எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் விற்பனை அதிகரித்து, அவர்களின் வருவாயும் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையில் எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் உற்சாகத்தின் இருக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close