Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்ஷூரன்ஸ் தொழிலில் குதிக்க 10 புதிய நிறுவனங்கள் விண்ணப்பம்!

நம் நாட்டில் இன்ஷூரன்ஸ் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதி கேட்டு 10 புதிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.


இந்தியாவில் முக்கியமாக இந்த நிறுவனங்கள் காப்பீடு மற்றும் மறு காப்பீடு தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதி கேட்டுள்ளதாக இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி வி.ஆர்.ஐயர் தெரிவித்துள்ளார். இவர் இந்த விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில் 2 நிறுவனங்கள் ஆயுள் காப்பீடு அல்லாத திட்டங்களுக்கும், ஒரு நிறுவனம் ஆயுள் காப்பீடு தொழிலுக்கும், ஒரு நிறுவனம் மருத்துவக் காப்பீடு, ஒரு நிறுவனம் மறுகாப்பீடு தொழிலுக்கும், 5 நிறுவனங்கள் சர்வதேச மறு காப்பீடு தொழிலை இந்தியாவில் மேற்கொள்ளவும் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close