Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய புதிய விதிமுறை

வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில், ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு வருமானம் ஈட்டும் தனிநபர்கள், நிறுவனங்களுக்காக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய விதிமுறைகௐளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் அசையா சொத்துகள் மதிப்பு விவரம், ரொக்கம் கையிருப்பு, தங்க நகைகள், வாகனங்கள், உல்லாசப் படகுகள், படகுகள், விமானங்கள் போன்றவற்றின் மதிப்பையும் அவர்கள் படிவத்தில் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டு முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிமுறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை தெரிவிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close