Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளைஞர்களுக்கு ஆரம்ப நிலை வேலை, தொழில்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்..!

இளைஞர்களுக்கு ஆரம்ப நிலை வேலை, தொழில்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்..!

வங்கி ஆரம்ப நிலை வேலைகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி

சென்னையை சேர்ந்த நெஸ்டோ குரூப் ஆப் கம்பெனீஸ் (Nesto Group of Companies), வங்கி ஆரம்ப நிலை வேலைகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி அளிக்கிறது.

இந்தப் பயிற்சியில் சேர ஏதாவது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். முன் அனுபவம் தேவை இல்லை. மாதச் சம்பளம் ரூ. 12,000

டி.ரமேஷ்

வயது : அதிகபட்சம் 27

இதே போல் டேடா என்ட்ரி பணிகளுக்கும் ஆள்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு பிளஸ் டூ அல்லது பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆரம்ப மாதச் சம்பளம் ரூ. 6,500

 ‘’இவற்றுக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது” என நெஸ்டோ குரூப் ஆப் கம்பெனீஸ்-ன் மேலாளர் டி.ரமேஷ் (ஆப்பரேட்டிங்)  தெரிவித்தார்.

 

பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங் இலவச பயிற்சி வகுப்பு..!

சென்னை கிண்டியிலுள்ள சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக்ஸ் இன் ஜினியரிங் டெக்னாலஜிஸ் (CIPET Central Institute of Plastics Engineering and Technology) இளைஞர்களுக்கு பிளாஸ்டிக்ஸ் துறையில் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சியை அளிக்கிறது.

மத்திய அரசின் இந்த பயிற்சி 3 முதல் 6 மாதம் அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில் 18 முதல் 35 வயதுள்ளவர்கள் சேரலாம்.

'' உணவு, போக்குவரத்துபடி உள்ளூர் மாணவர்களுக்கு ரூ.1,500, வெளியூர் மாணவர்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும். தங்கும் வசதி இலவசம்" என சிபெட் தொழில்நுட்ப ஆசிரியர் ஏ.ஜி.எஸ்.நீலகண்டன் தெரிவித்தார்.     

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close