Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை வெள்ளம்: 30 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்!

கடந்த ஆண்டு  டிசம்பர் முதல் வாரங்களில் தமிழகத்தில் கனத்த மழை பெய்தது. இதில் சென்னையில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு  கார், பைக் என ஏராளமான வாகனங்கள் பாதிக்கப்பட்டன. இதில் பாதிப்படைந்த வாகனத்தின் உரிமையாளர்கள் இழப்பீடு கேட்டு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் முறையிட்டு இருந்தன.

52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்ஷூரன்ஸ் இழப்பீடுகள் கேட்டு வாகனத்தின் உரிமையாளர்கள் விண்ணப்பித்து இருந்ததாக  இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் தெரிவித்தன. இவ்வாறு முறையிடப்பட்ட இழப்பீடுகளில் 30 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்கப்பட்டுள்ளதாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மதிப்பு ரூபாய் 5,500 முதல் 6,000 கோடி. இதில் சென்னையைச் சேர்ந்த யுனிடேட் இந்தியா இன்ஷுரன்ஸ் கம்பெனி நிறுவனம் மட்டும் அதிகபட்சமாக ரூபாய் 1,500 கோடிக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்கியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close