Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையால் ஐசிஐசிஐ நிகர லாபம் 76% சரிவு


நம் நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, மார்ச் காலாண்டில் நிகர லாபம் 76 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 16,234 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 18,590 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வருமானம் உயர்ந்திருந்தாலும் வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை இரு மடங்காக அதிகரித்ததால் ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் சரிந்திருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 1,344 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்போது 3,326 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த வருடம் மார்ச் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 2,922 கோடி ரூபாயாக இருந்தது. வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையால் மார்ச் காலாண்டு நிகர லாபம் 76 சதவிகிதம் சரிந்து 702 கோடி ரூபாயாக இருக்கிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close