Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச சந்தையால் சரிந்த சென்செக்ஸ்!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (02.05.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.


இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து காணப்பட்டது. ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வந்ததால் இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தன. மின்சாரம், ரியல் எஸ்டேட், வங்கி, தகவல், தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் மற்றும் மூலதன பொருட்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை குறைந்திருந்தது.
இந்த நிலையில் பலவீனமான நிலையில் சர்வதேச சந்தை, நிறுவனங்களின் நான்காம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் ஏமாற்றம் மற்றும் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவாக தொழில்துறை உற்பத்தி சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவடைந்து காணப்பட்டன.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 169.65 புள்ளிகள் சரிந்து  25,436.97 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 43.90 புள்ளிகள் சரிந்து  7805.90 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஹிண்டால்கோ 98.65 2.39%
கெயில் 367.60 2.01%
பி.எச்.இ.எல் 127.70 1.83%
ஆரோபிந்தோ பார்மா 769.85 1.30%
அம்புஜா சிமென்ட்ஸ் 223.80 1.27%

விலை குறைந்த பங்குகள்

ஐசிஐசிஐ வங்கி 226.75 -4.30%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 3,011.80 -2.49%
அதானி துறைமுகங்கள் 232.95 -2.20%
டெக் மஹிந்திரா 477.20 -1.84%
பார்தி ஏர்டெல் 357.80 -1.60%

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close