Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு அதிகரித்துக்கொண்டே வருகிறதே?

மியூச்சுவல் ஃபண்டில் மொத்த முதலீடு கடந்த மே மாதத்தில் குறைந்துள்ள போதிலும், ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு அதிகரித்து காணப்படுகிறது. கிரிஸில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மே மாதத்தில் ரூ. 4,721 கோடி ஈக்விட்டி மியூச்சுசல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இது ஏப்ரல் மாதத்தில் ரூ. 4,438 கோடியாக மட்டுமே இருந்தது. மொத்தமாக தற்போது ஈக்விட்டி மியூச்சவல் ஃபண்டுகளில் முதலீடு 3.8 சதவிகிதம் அதிகரித்து ரூ. 4.15 லட்சம் கோடியாக உள்ளது. இதற்கு மே மாதத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 இண்டெக்ஸ்கள் கிட்டதட்ட 4 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளதே காரணம்.

இந்த வருடம் பருவநிலை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும், மார்ச் மாத காலாண்டு முடிவில் பெரும்பாலான இந்திய நிறுவனங்களின் செயல்பாடு நன்றாக இருப்பதும் இந்த ஏற்றத்திற்கு காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏப்ரல் மாதத்தில் ரூ. 14.22 லட்சம் கோடியாக இருந்தது, மே மாதத்தில் 2.8 சதவிகிதம் குறைந்து ரூ. 13.82 கோடியாகக் குறைந்துள்ளது. இதற்கு லிக்விட் மற்றும் கில்ட் ஃபண்டுகளில் முதலீடு வெளியேறியதுதான் காரணம். லிக்விட் ஃபண்ட் 20 சதவிகிதமும், கில்ட் ஃபண்ட் 4.8 சதவிகிதமும் குறைந்துள்ளது. பேலன்ஸ்ட், டெப்ட் ஃபண்டுகள் பாசிட்டிவாகவே உள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close