லாப நோக்கில் பங்குகள் விற்பனையால் சந்தை சரிந்தது!
மாலை 3:30 மணி நிலவரம்
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (21.06.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
மத்திய அரசு, விமானப் போக்குவரத்து, சில்லறை வர்த்தகம், ராணுவம், மருந்து உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான விதிமுறைகளை தளர்த்துவதாக அறிவித்தது. இதனையடுத்து இந்திய பங்குச்சந்தைகள் நேற்று அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை விற்பனை செய்ததால் இந்திய பங்குச்சந்தை இறக்கத்தில் முடிவடைந்தது. இதுமட்டுமின்றி ஆசிய மற்றும் சர்வதேச பங்குச்சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகம் ஆனதால் இந்திய பங்குச்சந்தையும் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 54.14 புள்ளிகள் சரிந்து 26,812.78 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 18.60 புள்ளிகள் சரிந்து 8219.90 என்ற நிலையில் வர்த்தகமானது
விலை அதிகரித்த பங்குகள்
ஹிண்டால்கோ 123.20 1.78%
பார்தி இன்ப்ராடெல் 346.50 1.72%
ஓஎன்ஜிசி 216.80 1.38%
டாடா மோட்டார்ஸ் (டி) 324.00 1.20%
எம் அண்ட் எம் 1,366.00 1.12%
விலை குறைந்த பங்குகள்
ஆரோபிந்தோ பார்மா 720.70 -2.38%
டாடா பவர் 73.35 -2.27%
என்டிபிசி 151.60 -1.85%
டெக் மஹிந்திரா 534.60 -1.78%
அதானி துறைமுகங்கள் 203.20 -1.74%