Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெஸ்ஸி ஓய்வு பெறுவதால் பாதிப்பில்லை! டாடா மோட்டார்ஸ்

அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியைத் தழுவியதாலும், பெனால்டி ஷூட் அவுட்டில் தன்னால் கோல் அடிக்க முடியாமல் போன வெறுப்பினால் சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம்,"எங்களுடைய நிறுவனத்தின் சர்வதேச விளம்பரத் தூதராக இருக்கும் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இது அவருடைய தனிப்பட்ட முடிவு. மெஸ்ஸி ஓய்வுக்கு பிறகும் அவருடன் இணைந்து செயல்பட உள்ளோம்" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் நோக்கில் அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு வீரர் லியோனல் மெஸ்ஸியை "சர்வதேச விளம்பர தூதராக" கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தேர்வு செய்தது. பல முன்னணி நிறுவனங்களில் விளம்பர தூதராக இருக்கும் லியோனல் மெஸ்ஸி இந்தியாவைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் மட்டுமே விளம்பர தூதராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close