Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மண்ணெண்ணெய் விலை உயர்கிறது; மானியத்தை குறைக்க அரசு திட்டம்! காரணம் என்ன?

மண்ணெண்ணெய் மீதான மானிய சுமையை குறைக்கும் வகையில், அடுத்த 10 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் லிட்டருக்கு 25 பைசா விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
 
 
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கடந்த ஐந்து ஆண்டுகளாக, மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படாமல், மானிய விலையிலேயே விற்கப்படுகிறது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெரியளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதை தவிர்க்க, மண்ணெண்ணெய் மீதான மானியச் சுமையை குறைக்க, பெட்ரோலியத் துறை முடிவு செய்துள்ளது.
எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு, பெட்ரோலியத் துறை, அனுப்பியுள்ள கடிதத்தில், மண்ணெண்ணெய் விலையை, 2017 ஏப்ரல் வரை, 10 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும், லிட்டருக்கு, 25 பைசா உயர்த்த அனுமதி அளித்துள்ளது. இந்த மாதம், 1ம் தேதி முதல், இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close