Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்காம், ஆயில் & காஸ் பங்குகள் விற்பனையால் சென்செக்ஸ் சரிந்தது!

மாலை 3.30 மணி நிலவரம்
 
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (18.07.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
 
 
மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் சரக்கு மற்றும் சேவை வரி நிறைவேற்றப்படும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு போன்ற காரணங்களால் காலை நேர வர்த்தகத்தில் சந்தை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகள் விற்பனை மற்றும், மூலதன பொருட்கள், எண்ணெய் & எரிவாயு மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததால் மாலை நேர வர்த்தகத்தில் சந்தை இறக்கத்தில் காணப்பட்டது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 89.84 புள்ளிகள் சரிந்து   27,746.66 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 32.70 புள்ளிகள்  சரிந்து  8508.70 என்ற நிலையில் வர்த்தகமானது 
 
விலை அதிகரித்த பங்குகள்
 
பஜாஜ் ஆட்டோ 2,755.35 2.22%
பார்தி இன்ப்ராடெல் 357.65 1.23%
டாடா மோட்டார்ஸ் (டி) 314.90 1.08%
ஆக்சிஸ் வங்கி 571.00 1.05%
இன்போசிஸ் 1,081.95 0.88%
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலார் 103.85 -6.53%
ஓஎன்ஜிசி 218.60 -5.06%
பார்தி ஏர்டெல் 362.65 -4.29%
பேங்க் ஆப் பரோடா 159.05 -3.17%
ஜீ மகிழ்விக்க 461,05 -2,31

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close