"Hiring" எல்லாம்... "Firing" ஆக இருக்குமாம்! ஆனால் நடக்குமா?
நம் நாட்டில் Hiring அதாவது வேலைக்கு பணியமர்த்தல் நடவடிக்கை என்பது Firing ஆக அதாவது அனைத்து வட்டாரங்களிலும் மிக அதிகளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை நம் நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சியடையும்போது என்று நன்றாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Korn Ferry, EMA Partners, Hunt Partners, Micheal Page, Team Lease Services மற்றும் Transearch போன்ற வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு நிறுவனங்கள் இந்தியாவில் வேலைக்கு பணியமர்த்தும் நடவடிக்கை என்பது அதிகளவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வேலைவாய்ப்பு பணியமர்த்தல் நடவடிக்கை 18 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக தொழில்துறை, உள்கட்டமைப்பு, பார்மா, நுகர்வோர் சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் பணியமர்த்தல் நடவடிக்கை அதிகளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.