Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிஎஃப்-ல் சட்டத் திருத்தம்; மத்திய அரசு அதிரடி திட்டம்!

ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் இருந்தாலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) பிடித்தம் செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
 
தற்போது 20 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் மட்டும் இபிஎஃப் பிடித்தம் செய்யப்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் இருந்தாலும் பிஎஃப்-ல் பிடித்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
இது குறித்து மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், "லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் பணியாற்றினாலும் அவர்களுக்கு இபிஎஃப் பிடித்தம் செய்யப்படுவது கட்டாயமாக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close