Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரகுராம் ராஜனின் கடைசிக் கூட்டம்; என்ன எதிர்பார்க்கலாம்?

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் நாளை (09.08.16) நடைபெறுகிறது. இந்த நிலையில் ரகுராம் ராஜனின் நடவடிக்கை என்னவாக இருக்கும், இந்த வாரம் சந்தைக்கு இனிய வாரமாக இருக்குமா என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர் எஸ்.லெட்சுமணராமன் கேட்டோம். இது குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
 
 
"இந்தியப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்றால், கடந்த 2, 3 மாதமாக பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மத்திய அரசு பணவீக்கத்தை 4 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், ரகுராம் ராஜனைப் பொறுத்தவரை வட்டி விகிதத்தை குறைக்க மாட்டார் என்பதுதான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போதைய நிலையிலேயே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆனால், இந்தியப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை நாளை நடைபெறும் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் ரகுராம் ராஜனின் பார்வை எப்படி இருக்கும் என்பதை பொறுத்தே சந்தை அமையும். அதாவது, பணவீக்கத்தை பற்றி ரகுராம் ராஜன் என்ன நினைக்கிறார்; அடுத்து வர இருக்கும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு எந்த மாதிரியான கருத்தை தெரியப்படுத்த விரும்புகிறார்; ஜிஎஸ்டி அமல்படுத்தும்போது பணவீக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து என்ன கூறுவார் என பல எதிர்பார்ப்புகள் இவரிடம் உள்ளது. 
 
ஜிஎஸ்டி என்பது இந்தியாவுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், உலகில் பல நாடுகளில் ஜிஎஸ்டி போன்ற வரிகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற நாடுகளில் எந்த ஆண்டு வரி அமல்படுத்தினார்களோ அந்த நாடுகளில் பணவீக்கம் அந்த ஆண்டு மட்டும் அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்ததினால் அந்த நாடுகளில் நுகர்வு குறைந்துள்ளது. அதன் பிறகு இரண்டாவது, மூன்றாவது ஆண்டுகளுக்கு பிறகு தான் பணவீக்கம் நிலைத்தன்மை பெற்று பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது. 
ஆக ரகுராம் ராஜன் ஜிஎஸ்டியைப் பொறுத்தவரை என்ன பேசுகிறாரா, இல்லையா என்பதை பார்க்க வேண்டும். இல்லையெனில் பணவீக்கத்தைப் பற்றி பொதுவாக பேசுகிறாரா என்பதை பார்க்க வேண்டும்.
 
ரகுராம் ராஜன் பருவமழை குறித்து ழுழு அளவு தெரிந்து கொண்டு பொருளாதாரத்தில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தும் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
வட்டி விகிதத்தை குறைக்கமாட்டார் என்பதில்தான் பெரும்பாலானவர்களின் எண்ணமாக உள்ளது. எனினும் நாட்டின் பொருளாதாரம், பணவீக்கம், ஜிஎஸ்டி மசோதா பற்றி என்ன பேசுவார் என்பதிலேயே உள்ளது. 
 
இந்தியப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை இந்த வாரம் பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்று மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்ப்பு; மக்களவையில் மோடி உரையாடலில் பங்கேற்று என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு; நாளை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை ஆய்வுக்கூட்டம்; இதுமட்டுமின்றி மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 1,300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வாரம் காலாண்டு முடிவுகளை வெளியிடுகின்றன. இதில் எஸ்பிஐ, மகிந்திரா அண்ட் மகிந்திரா, லூபின் உட்பட பல முக்கிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் எதிரொலிக்கும். இதனால் சந்தையில் இந்த வாரம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். 
 
வரும் வெள்ளிக்கிழமை ஐஐபி மற்றும் பணவீக்கம் குறித்த டேட்டா உட்பட பல நிகழ்வுகள் உள்ளதால் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிஃப்டியைப் பொறுத்தவரை வீக்லி சார்ட்-ல் ஹெங்கிங் மேன் பேட்டர்ன் பார்ம் ஆகி உள்ளது. இந்த மாதிரி பேட்டர்ன் பார்ம் ஆனாலே மார்க்கெட் டைரக்‌ஷன் மாறும் என்பது கருத்து. 
 
இதுதவிர முந்தைய நிதி ஆண்டைவிட இந்த நிதி ஆண்டில் நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் என்பது குறைந்தளவிலேயே உள்ளது. ஆனால், மார்க்கெட் மேலே அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இதற்கு காரணம் என்னவெனில் அந்நிய நேரடி முதலீடு அதிகளவில் அதிகரிப்பு, சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் நிதிக்கொள்கை குறித்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் இந்திய சந்தை அதிகரித்து வருகிறது. 
 
எனினும் இந்த வாரம் பல நிகழ்வுகள் இருப்பதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் மேற்கொள்ளும்படிதான் சந்தை இருக்கும். இந்த வாரம் நிஃப்டி 8,710க்கு மேலே வர்த்தகம் நடைபெற்று மார்க்கெட் க்ளோஸ் ஆனால், 8,800 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 8,710க்கு கீழே க்ளோஸ் மார்க்கெட் க்ளோஸ் ஆனால் 8,600 வரை குறைய வாய்ப்புள்ளது. இங்கு இருந்து மார்க்கெட் சப்போர்ட் எடுத்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றார்.
 
சோ.கார்த்திகேயன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close