Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச சந்தை, டேட்டாவால் சந்தை ப்ளாட்!

காலை 10.40 மணி நிலவரம்
 
இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய (16.08.16) காலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.
 
வாரத்தின் இறுதி நாளான கடந்த வெள்ளிக்கிழமை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பேங்க் ஆப் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை மிஞ்சி வெளியானதால் இந்நிறுவனத்தின் பங்குகள் அதிகளவில் உயர்ந்தது. இதன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. 
 
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தொடங்கிய வர்த்தகம் காலை நேர வர்த்தகத்தில் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தை மற்றும் மேக்ரோ எக்னாமிக் டேட்டா பலவீனமான நிலையில் இருந்த காரணத்தினால் சென்செக்ஸ் ப்ளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 22.00 புள்ளிகள் உயர்ந்து 28,174.40 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 3.55 புள்ளிகள் உயர்ந்து 8,675.75 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
அதானி துறைமுகங்கள் 271.40 5.09%
பிபிசிஎல் 598.85 3.26%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 182.05 2.25%
சிப்லா 527.10 2.16%
ஹிண்டால்கோ 148.80 1.67%
 
விலை குறைந்த பங்குகள்
 
பார்தி இன்ப்ராடெல் 350.10 -4.37%
ஆரோபிந்தோ பார்மா 734.20 -1.77%
டாடா மோட்டார்ஸ் 509.05 -1.50%
கிராஸிம் 4,495.00 -1.46%
ஆக்சிஸ் வங்கி 582.45 -1.45%
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close