Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல் & டி-க்கு 'எஜமானர்' ஆகப்போகும் எஸ்.என்.எஸ்!

 
லார்சன் அண்ட் டியூப்ரோ (எல் & டி) என்ற இந்தியாவின் மிகப் பெரிய கட்டுமான சாம்ராஜ்யம் 1938-ம் ஆண்டு இரண்டு டச்சு பொறியாளர்களால் துவக்கப்பட்டு இன்று கிளை பரப்பி கம்பீரமாக வளர்ந்திருக்கிறது. 
 
 
எல் & டி, இந்தியாவில் மட்டுமின்றி ஓமன், கத்தார், சவுதி அரேபியா, அபுதாபி ஆகிய நாடுகளிலும் கட்டுமானம் மூலம் தன் கால்களை பதித்திருக்கிறது. குறிப்பாக, ஓமன் நாட்டில் இருக்கும் சலாலாஹ் விமான நிலையத்தை கட்டியது எல் & டி தான். இப்படி படிப்படியாக  வளர்ந்த நிறுவனத்தின் கீழ் இன்று ரியல் எஸ்டேட், கட்டுமானம், கனரக கருவிகள், மின்சாரக் கருவிகள், மின்சாரம், கப்பல் கட்டுமானம், நிதி சேவைகள், ஐடி சேவைகள் என்று 82க்கும் மேற்பட்ட பலவகையான தொழில்களை செய்து வருகிறது. 
 
அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா...?
 
இப்படிப்பட்ட ஒரு பெரிய நிறுவனத்தின் அடுத்த தலைவராக ஏ.எம்.நாயக்கிற்குப் பிறகு பதவி வகிக்கப் போகிறவர் எஸ்.என்.எஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.என்.சுப்ரமணியன். 
தற்போது எக்ஸிக்யூட்டிவ் சேர்மேனாக இருக்கும் ஏ.எம்.நாயக்-ன் பதவிக் காலம், வரும் 30 செப்டம்பர் 2017-ல் முடிவடைகிறது. அதன் பிறகு  சுப்ரமணியன் அந்த பதவியை வகிக்க இருக்கிறார் என்று நாயக்கே சொல்லி இருக்கிறார்.

அப்படி என்ன சாதித்துவிட்டார் சுப்ரமணியன் என்று கேட்கிறீர்களா...?
 
1984-ல் சாதாரண ப்ராஜெட் பிளானிங் இன்ஜினீயராக, எல் & டி குழுமத்தில் தன் வாழ்கையைத் தொடங்கினார் சுப்ரமணியன்.
 
டெல்லி, ஹைதராபாத், மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரிய விமான நிலையங்கள் கட்டுமான கான்டிராக்ட்களை பெற்று, சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது இவர் தலைமையில் தான். மும்பையில் கம்பீரமாக இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் கட்டிடம் மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) கட்டிடமான பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸை கட்டியதும் இவர் தலைமையில் தான்.
 
ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டம், ஹைதராபாத் ஹைடெக்ஸ் (HITEX) கண்காட்சி, ஹைதராபாத் ஹைடெக் (HITEC) சிட்டி கட்டுமானத் திட்டம் போன்றவைகளுக்கு தலைமை தாங்கியவர் இவர் தான். அவ்வளவு ஏன், சென்னையில் இருக்கும் டைடல் பார்கை கட்டியது இவர் தலைமையில் தான்.
“என் வேலை கட்டடங்கள் கட்டுவது மட்டுமே “ என்று ஒதுங்கிவிடாமல் எல் & டி குழுமத்தில் ரெடி மிக்ஸ் பிசினஸை அறிமுகப்படுத்தி, லாபமும் சம்பாதித்து காட்டினார். இன்று ரெடி மிக்ஸ் இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 
இப்படி எல் & டியில் இவர் பல சாதனைகளைப் படைப்பதைப் பார்த்து சுப்ரமணியத்திற்கு, 2012-ம் ஆண்டு “அவுட் ஸ்டான்டிங் கான்ட்ரிபியூட்டர் டு தி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இண்டஸ்ட்ரீ “ என்கிற பட்டதை கன்ஸ்ட்ரக்‌ஷன் வீக் குழுமம் வழங்கியது. அதே போல் 2014-ம் ஆண்டில் அசைக்க முடியாத துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் தலைவர்கள் பட்டியலில் 36-வது இடத்தை கொடுத்து கெளரவித்தது கன்ஸ்ட்ரக்‌ஷன் வீக் என்கிற குழுமம்.
 
இங்கிலாந்தில் உள்ள இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் சிவில் இன்ஜினீயர்ஸ் குழுமத்தில் இவர் ஒரு ஃபெல்லோ உறுப்பினர். இந்தியாவின் கட்டுமானர்கள் குழுவின் உயர்ந்த சங்கமான Board of Governors of Construction Industry Development Council (CIDC)-லும் இவர் உறுப்பினர். இந்த இரண்டு உறுப்பினர்கள் பதவிகளும் அவ்வளவு எளிதில் கிடைக்காது.
 
10 வருடத்திற்கு முன்புதான் ஏ.எம்.நாயக்கின் கண்களில் ஒரு துருதுரு பணியாளராக தெரிந்தார் சுப்ரமணியன். மற்ற சீனியர்களின் அறிவு, திறமை மற்றும் புதுமைகளை விட சுப்ரமணியனின் எண்ணங்களும், செயல்களும் எல் & டியின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் வழிகாட்டியது. மற்ற பல சீனியர்களை பின்னுக்கு தள்ளி அதி விரைவாக கன்ஸ்ட்ரக்‌ஷன் துறையின் தலைவரானார்.  
பதவிக்கு வந்த உடன் எல் & டியின் கன்ஸ்ட்ரக்‌ஷன் துறையை எல் & டி குழுமத்திலேயே அதிக வருமானத்தைக் கொடுக்கக் கூடிய துறையாக மாற்றினார். அதிக வருமானம் என்றால், குழுமத்திற்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 80%.
 
 
 
தன் திறமையாலும், புதுமையான தொழில்நுட்பங்களையும் புகுத்தி, தனக்குள் இருந்த திறமையை, தான் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே வெளிப்படுத்தியதால் கடந்த அக்டோபர் 2015-ல் எல் & டி குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக இருக்கிறார். இது தான் அந்த குழுமத்தின் இரண்டாது உயரிய பதவி. கூடிய விரைவில் குழுமத்தின் செயல் தலைவராக (Group Executive chairman) வர இருக்கிறார். 
 
எஸ்.என்.எஸ்ஸிடம் ஏ.எம்.நாயக்கை பற்றி கேட்ட போது “ நாயக்-ன் சிஷியன் நான் “என்று ஒத்தை வரியில் பதில் சொல்லி இருக்கிறார். இந்த பதிலைக் குறித்து நாயக்கிடம் கேட்ட போது
 
“என் சிஷியன் என்னவாக விரும்புகிறானோ அதுவாகவே ஆவான். வருங்காலங்களிலும் சுப்ரமணியன் சிறப்பாக, செயல்பட்டு நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வான்" என்று சிரித்துக் கொண்டே கருத்து தெரிவித்திருக்கிறார் நாயக்.

- மு.சா.கௌதமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close